உள்ளமெல்லாம் தள்ளாடுதே படத்தில் சுஹாசினி
July 27, 2010 09:27:23
தமிழில் நீண்டநாட்களுக்குப் பின்னர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சுஹாசினி. கன்னடம், தெலுங்குப் படங்களில் நடித்து வந்த சுஹாசினியை உள்ளமெல்லாமல் தள்ளாடுதே படத்துக்காக மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
சுஹாசினி, கதையின் நாயகியாக உள்ளமெல்லாம் தள்ளாடுதே படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்றுள்ளார்.
சுஹாசினி இப்போதெல்லாம் நடிப்பதில்லை. ஜெயா டிவியில் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அது போக சமீபத்தில் வசனகர்த்தா என்ற புதிய அவதாரத்தையும் ராவணன் படம் மூலம் எடுத்தார்.
தற்போது தமிழ் சினிமாவில், கதை நாயகன், கதை நாயகி என்ற புதிய டிரெண்ட் பாப்புலராகியுள்ளது. அந்த வரிசையில் சுஹாசினியும் கதைநாயகியாகியுள்ளார்.
உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்ற படத்தில் கதையின் நாயகி சுஹாசினிதானாம். இளம் வயதில் விதவையாகும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், உணர்ச்சிப் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராயும் படமாம் இது.
இப்படத்தில் சுஹாசினியின் மகள் வேடத்தில் அர்ச்சனா நடித்துள்ளார். இவர் வேகம் படத்தின் நாயகியாவார்.