Home Tamil News National News தெருவில் பாலாபிஷேகம்!: சிவசேனாவின் நூதன போராட்டம்
  

Latest News:

தெருவில் பாலாபிஷேகம்!: சிவசேனாவின் நூதன போராட்டம்

July 29, 2010 10:32:21
லட்சக்கணக்கான மக்கள் இரண்டு வேளை சோறு கிடைக்காமல் சிரமப்படும், லட்சக்கணக்கான குழந்தைகள் குடிக்க பால் இன்றி தவிக்கும் நாட்டில் லட்சக்கணக்கான லிட்டர் பாலை வீணாக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறது சிவசேனா அமைப்பு.

கறுப்பான தார்ச்சாலைகளை வெண்மையான பால் சாலைகளாக மாற்றும் இந்த வீண் போராட்டத்தை மகாராஷ்டிராவில் உள்ள சதாரா பகுதி சிவசேனாவினர் நடத் தி வருகின்றனர்.

பாலை தெருவில் கொட்டிவரும் இந்தப் போராட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் ஆறுக்கும் மேற்பட்ட பால் டேங்கர்களை வழிமறித்து பாலை திறந்து விட்டு, லட்சக்கணக்கான லிட்டர் பாலை வீணாக்கி உள்ளனர் சிவசேனா கட்சியினர்.

வெளிநாடுகளில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்ய மகாராஷ்டிர அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அரசின் இந்த முடிவால் உள்ளூர் பால் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், அதற்காக எதிர்ப்பை அரசுக்கு காட்டவே இந்த பால் வீணாக்கும் போராட்டம் என்றும் சிவசேனா கூறியுள்ளது.

-சிவாஜி டிவி

Related National News:

Shiv Sena urges to arrest Modi IPL news
Kajol attacks on Shiv Sena
Mumbai people rejects Shiv Sena arguments : Karunanidhi