டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்சமயம் வரை ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது அலங்காரம் மற்றும் வாண வேடிக்கை நிகழ்த்த ரூ.40 கோடி ஹீலியம் பலூனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளையொட்டி, தலைநகர் டெல்லியில் பாலங்கள், சாலைகள் என அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் டெல்லி குடியிருப்புவாசிகளின் வாழ்க்கைத் தரமும் உயர உள்ளது.
தொடக்க விழாவிற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான பாடலை உருவாக்க இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ.5 கோடி தரப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் வண்ணம் பாடலை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுக்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் மைதானத்தின் மேலே தொங்கவிடப்பட உள்ள இந்த ஹீலியம் பலூனில் வண்ண ஒளிப் பாய்ச்சும் கருவிகளும் கேமராக்களும் இருக்கும். இதை நிறைவு விழாவின் போதும் பயன்படுத்தினால் கூடுதலாகச் செலவாகும் எனக் கூறப்படுகிறது.
ஹீலியம் பலூனுக்காக ரூ.40 கோடி செலவழிப்பதற்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ளது. ஆடம்பரத்திற்காகச் செய்யப்படும் வெற்றுச் செலவு இது என்று கூறப்படுகிறது. இந்த பலூனை இயக்கி செயல்பட செய்யும் வேலையை இத்தாலிய நிறுவனம் செய்கிறது. இதே நிறுவனம் தான் 2006 டூரின் நகரில் நடந்த ஒலிமபிக் போட்டியின் தொடக்க விழாவிலும் பல வாண வேடிக்கைகளை செய்து காண்பித்தது.
பொருளாதார நிலை மந்தமாக உள்ள நிலையில், காமன்வெல்த் போட்டிகளுக்காக இவ்வளவு செலவு செய்யப்படுவது தேவையற்றது என்று கூறும் பாஜக கட்சி இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவும் தயாராகி வருகிறது.
-சிவாஜி டிவி
Related Sports News:
Queen
Baton Relay enters India today - Current News in IndiaAbhinav
Bindra Clinches India's First Individual
Olympic GoldSri
Lanka Denied Next Commonwealth Summit