Home Tamil News Entertainment News நடிகை ஹேமமாலினி வீட்டில் கொள்ளை: 2 பேர் பிடிபட்டனர்
Illinois Institute Of Technology
  

Latest News:

நடிகை ஹேமமாலினி வீட்டில் கொள்ளை: 2 பேர் பிடிபட்டனர்

March 02, 2010 10:54:43

மும்பை: நடிகை ஹேமமாலினி வீட்டில் ரூ 80 லட்சம் ரொக்கம் - நகை நேற்றுமுன்தினம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பை கோரேகானில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ஹேமமாலினியின் வீட்டின் ஜன்னலை உடைத்து நேற்று முன்தினம் ரூ.75 லட்ச ரொக்கமும், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 

இது குறித்து ஹேமமாலினி அளித்த புகாரின் பேரில் கோரேகான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொள்ளை தொடர்பாக ஹேமமாலினி வீட்டு காவலாளியையும், வீட்டு வேலைக்காரர் ஒருவரையும் கோரேகான் விசாரணைக்காக நேற்று போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களிடம் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Entertainment News:

போலீஸ் வேடத்தில் வந்த திருடர்கள்; நடிகைக்கு கத்திக் குத்து!
Robbers Exploit Police Drill: Rs 14 Lakh Stolen
கொள்ளை கும்பல் கொல்லத்தில் கைது - 4 கிலோ தங்கம் மீட்பு