Home Tamil News International News ஒசாமா இருக்குமிடம் பாகிஸ்தானுக்கு தெரியும்! : ஹில்லாரி அதிரடி
  

Latest News:

ஒசாமா இருக்குமிடம் பாகிஸ்தானுக்கு தெரியும்! : ஹில்லாரி அதிரடி

July 20, 2010 15:58:36
அதிபயங்கரத் தீவிரவாதியான ஒசாமா பின்லேடன் இருக்குமிடம் பாகிஸ்தானுக்கு தெரியும். அவன் எங்கிருக்கிறான் என்பதை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தெரிவிக்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் புனரமைப்புக்காக உதவிவரும் நாடுகளின் 'நன்கொடையாளர்களின் மாநாடு' ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூலில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் காபூல் வந்திருக்கிறார்.

காபூலில் அவர் நேற்று ஃபாக்ஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் 'அல்கொய்தா தீவிரவாத அமைப்பு குறித்தும், அதன் தலைவன் ஒசாமா பின்லேடன் குறித்தும் பாகிஸ்தான் நாடு அமெரிக்க உளவுப்பிரிவிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

'ஒசாமா மற்றும் அவருடைய தீவிரவாதக் குழுவினர் பாகிஸ்தானில் தான் உள்ளனர். அவர்களைப் பற்றி பாகிஸ்தான் அரசில் உள்ள சிலருக்கு அ முதல் ஃ வரை தெரியும். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது நியூயார்க் நகர செனட்டராக இருந்த எனக்கும் தீவிரவாதிகளின் இருப்பிடம் குறித்து தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது. அமெரிக்க உளவுத்துறைக்கு மட்டுமல்லாது எனக்கும் அவர்களைப் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் கூறவேண்டும்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில் 'பாகிஸ்தான் அரசியலில் உள்ள பிரச்னைகளால் அந்த அரசு தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக அறிகிறேன். அதனால்தான் எங்கள் ஒத்துழைப்பு அவர்களுக்கு தொடர்கிறது. மற்றொரு முறை அமெரிக்காவிற்குள் தீவிரவாதம் நுழைவதை தடுக்கும் விதத்தில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. ஆகையால் இந்தப் பகுதியில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அமெரிக்க படையினர் முகாமிட்டிருப்பர்' என்றார் ஹில்லாரி கிளிண்டன்.

-சிவாஜி டிவி

Related International News:

Hilary Clinton Accuses Sri Lankan Army Of Rape Crime
Bill Clinton daughter Chelsea Clinton wedding - International News
Bill Clinton hospitalized - International Tamil News