மும்பை தாக்குதலுக்குப் பிறகு நேற்று முன்தினம் நடந்த இந்தியா - பாகிஸ்தான்
இடையிலான பேச்சுவார்த்தை முறிவுக்குப் பின்னர் 'இந்தியாவுடன்
பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாக' பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி
அறிவித்துள்ளார்.
14 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணா 15ஆம் தேதி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் இருநாடுகளுக்கு
இடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. மும்பை தாக்குதலில்
ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தண்டனை மற்றும் அமெரிக்காவில் சிக்கியுள்ள
பாகிஸ்தான் தீவிரவாதி ஹெட்லி விவகாரம் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத
இயக்கங்களின் நடவடிக்கை குறித்து பேசப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு கருத்து தெரிவித்த குரேஷி,
பேச்சுவார்த்தையின் போது இந்திய அமைச்சர் கிருஷ்ணாவுக்கு டெல்லியில்
இருந்து வழிகாட்டுதல்கள் வந்துகொண்டிருந்ததாகவும், இந்தியா
பேச்சுவார்த்தைக்கு தயாராக வரவில்லை என்றும் கூறிய குரேஷி, மத்திய உள்துறை
செயலாளர் ஜி.கே. பிள்ளையை, லஷ்கர் இ தொய்பா இயக்கத் தலைவர் சையத்துடன்
ஒப்பிட்டு பேசினார்.
குரேஷியின் குதர்க்கமான பேச்சால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான
பேச்சுவார்த்தை முறிந்தது. குரேஷி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா
முழுக்க எதிர்ப்பு தோன்றியிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தையை தொடர
விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆவல் வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் 'இந்தியா - பாகிஸ்தான் இடையிலான
பேச்சுவார்த்தை முறிந்ததாகக் கருதவில்லை. இதுவிஷயத்தில் எழுந்த பிரச்னைகளை
அடுத்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசினேன். நடந்த
பேச்சுவார்த்தை குறித்து விவாதித்தோம்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.
இருதரப்பிலும் உள்ள பிரச்னைகளை பேசித் தீர்க்கத்தான் பாகிஸ்தான்
விரும்புகிறது' என்று கூறியிருக்கிறார் கிலானி.
Related International News:
Pak slams India, peace process collapses - International Tamil NewsKrishna
arrives in Pak, will meet Zardari, Gilani on Thursday - Current News in
IndiaSM
Krishna visits Pakistan tomorrow - India News Latest