Home Tamil News International News பிரதமர் பதவிக்கு எனது கணவர் தகுதியானவர் இல்லை: மனைவி பேட்டி
  

Latest News:

பிரதமர் பதவிக்கு எனது கணவர் தகுதியானவர் இல்லை: மனைவி பேட்டி

July 24, 2010 14:17:31

ப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல என அவரது மனைவி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது நயோ போகான் (63) ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். பிரதமராக இருந்த ஒட்டோயாமா பதவி விலகியதை தொடர்ந்து கடந்த மாதம் இவர் பிரதமராக பதவி ஏற்றார்.
அதன் பிறகு நடந்த பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் பிரதமர் நயோ போகானின் மனைவி நொபுககான் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. இதில், தனது கணவர் குறித்தும் பொது மக்களின் ஆதரவை பெற அவர் எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவருக்கு பிரதமர் பதவி கிடைத்தது. ஆனால் அப்பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்றும் எழுதியுள்ளார்.
இச்சம்பவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related international News:

Japan Envoy Akashi Advised SLA
Japanese Experts Guided LTTE With Submarine Channels
Sri City Signs Mou With Japan's Kobelco Construction Machiery Co LTD
Comments
  • Posted by  writzy
    2010-07-26 07:10
    மேலும் ஏராளமான வாசர்களை உங்கள் பதிவுகள் சென்றடைய இந்த தளத்தில் பகிருங்கள்...http://writzy.com/tamil/