Home Tamil News Sports News முரளிதரன் - பேடி முட்டல்!
  

Latest News:

முரளிதரன் - பேடி முட்டல்!

July 28, 2010 15:42:53
தன்னுடைய பந்துவீச்சை குறை கூறிய இந்தியாவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடியை வார்த்தைகளால் தாளித்திருக்கிறார் ஓய்வுபெற்ற இலங்கை பந்துவீச்சாளர்முரளிதரன்.

கடந்த வாரத்தில் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முரளிதரன். இலங்கை காலே மைதானத்தில் நடந்த இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்து, சர்வதேச அளவில் 800 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையுடன் அன்று மாலையே ஓய்வு பெற்றார் இலங்கை பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்.

அவருடைய பந்துவீச்சு குறித்து கிரிக்கெட் உலகில் அவ்வவ்போது சர்ச்சை எழுவதுண்டு. வழக்கமான முறைகளில் இருந்து அவருடைய பந்துவீச்சு மிகவும் வேறுபட்டது என்பதால், முரளிதரனின் பந்துவீச்சு சோதனைக்கு கூட உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த தடைகளை தாண்டி, டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த சாதனைகளுடன் ஓய்வு பெற்றுவிட்டார் முரளிதரன்.

அவர் ஓய்வு பெற்றதையொட்டி உலக கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். இந்தியாவின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி முரளிதரன் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவருடைய பந்துவீச்சு பற்றி குறை கூறி இருந்தார்.

அவருடைய கருத்தால் கடும் கோபமடைந்த முரளிதரன் இன்று பதிலடி கொடுத்துவிட்டார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் 'மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதற்கு முன்பாக தன்னை பற்றி பேடி நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை பிஷன்சிங் பேடி, அவருடைய காலத்தில் இருந்த மிகச் சாதாரணமான பந்துவீச்சாளர். அவர் ஒன்றும் சாதனையாளர் அல்ல. ஆனால் சர்ச்சைகளுக்கு அலைபவர். அவரைவிட  பிரசன்னாவையும் வெங்கட்ராகவனையும் உயர்வாக நினைக்கிறேன்' என்று தாக்கிவிட்டார்.

முரளியின் வார்த்தை தாக்குதல் குறித்து பிஷன்சிங் பேடி கூறுகையில் 'முரளி அளவுக்கு நான் கீழிறங்கி பேச விரும்பவில்லை' என்று ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.

-சிவாஜி டிவி

Related Sports News:

Muralitharan wish to play for World Cup Cricket - Sports News Online
Rajapaksa honours Muralitharan - Sports News
Muralitharan 800th wicket in farewell Test - Sports News in Tamil














Comments
  • Posted by  mano
    2010-07-30 11:49
    bedy not talented man he is a very poor bowler