அர்ஜெண்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக மரடோனா கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0-4
என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்த அர்ஜெண்டினா அணி நாடு திரும்பி 3
வார காலம் முடிந்து விட்ட நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா
நீக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் தோற்றிருந்தாலும் அணியின் பயிற்சியாளராக அவரே
தொடராம் என்று அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் முதலில்
தெரிவித்திருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த சம்மேளனத்தின்
கூட்டத்தில் மரடோனாவின் பயிற்சியாளர் காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை.
விரைவில் புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் கூறியது.
மரடோனாவின் நீக்கத்திற்கு அர்ஜெண்டினா கால்பந்து ரசிகர்கள் எதிர்ப்பு
தெரிவித்து வரும் நிலையில், அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனத்திற்கு எதிராக
மரடோனாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அவர் அளித்த பேட்டியில்
'பயிற்சியாளர் பதவியில் இருந்து என்னை
நீக்கியது கால்பந்து சங்க தலைவர் ஜூலியோ சிரான்டோனாவும், அணி மேலாளர்
சார்லோஸ் பிலார்டோவும் தான்.இருவரும் சதி செய்த என்னை
நீக்கியுள்ளனர்.
கிராண்டோனா என்னிடம் பொய் பேசினார் என்றால் பிலார்டோ நம்பிக்கை துரோகம்
செய்திருக்கிறார். பயிற்சியாளராகத் தொடர விரும்பவில்லை என்றபோது
தொடர்ந்து பணியாற்ற சொன்ன அவர்கள், இப்போது நீக்கியுள்ளனர். இதன் மூலம்
எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். இனி வரும் புதிய
பயிற்சியாளருக்கும் என்னுடைய நிலையே ஏற்படக்கூடும்' என்று கோபமாகக்
கூறினார் மரடோனா.
கால்பந்து பயிற்சியாளர் விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலைக்கு அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா கிரிஸ்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-சிவாஜி டிவி
Related Sports News:
Diego Maradona sacked as Argentina coach - International sports NewsFIFA-2010:
Argentina enters knock out round gently - Sports NewsFIFA-2010:
Germany meets Argentina in quarter final - Sports News in Tamil