Home Tamil News Sports News பிசிசிஐ விசாரணை : லலித்மோடி இன்றும் ஆப்சென்ட்
  

Latest News:

பிசிசிஐ விசாரணை : லலித்மோடி இன்றும் ஆப்சென்ட்

July 27, 2010 12:10:05
பிசிசிஐ அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பாக இன்றும் லலித் மோடி ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விசாரணை விவரங்களைக் கேட்டறிந்தனர்.

ஐபிஎல் அமைப்பின் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகப் புகார். அதைத் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். ஐபிஎல் அமைப்பின் தற்காலிகத் தலைவராக அமீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். லலித்மோடியின் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஐபிஎல் லின் தற்காலிகத் தலைவர் அமீன், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் ஜோதிரத்யா சிந்தியா ஆகியோர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவை பிசிசிஐ அமைத்தது.

இந்தக் குழு முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு லலித் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்தக் குழு நியாயமான விசாரணையை நடத்தாது என்றும், எனவே இந்தக் குழுவை கலைத்து உத்தரவிடவும் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார் லலித் மோடி. ஆனால் அவருடைய மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பாக லலித்மோடி ஆஜராவதுதான் சரி என்று தீர்ப்பளித்தது.

கடந்த 16 ஆம் தேதி கூடிய ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பாக லலித் மோடி ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய வழக்கறிஞரகள்தான் ஆஜராகினர். அடுத்தக் கட்ட விசாரணை டெல்லியில் 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் லலித்மோடி ஆஜராக வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிசிசிஐ யின் ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று டெல்லியில் கூடியது. ஆனால் லலித் மோடி ஆஜராகவில்லை. தான் ஆஜராகாமல் தன்னுடைய வழக்கறிஞர்களை ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடம் அனுப்பியுள்ளார் லலித்மோடி.

ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பாக ஆஜரான அவருடைய வழக்கறிஞர்கள் விசாரணை விவரங்கைளைக் கேட்டறிந்தனர்.

-சிவாஜி டிவி

Related Sports News:

Lalit Modi Plea Rejected By Bombay High Court - Latest Sports News
Lalit Modi plea postponed - Sports News Online
No relief for Lalit Modi - Sports News