இந்தியாவுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காணவே விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார்.
வெள்ளிக்கிழமை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் நடத்திய பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்த அவர், தற்போது தனது குற்றச்சாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். இவருக்கு ஆதரவாக பிரதமர் யூசுப் ராஸா கிலானியும் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சென்றார். அங்கு அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியுடன் நாள் முழுவதும் பேச்சு நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் கிருஷ்ணா தில்லி திரும்பினார்.
அவர் தில்லி வந்து சேரும் முன்பாகவே, இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து கடுமையாக விமர்சித்தார் குரேஷி. எந்தவிதமான முன்னேற்றமும் பேச்சுவார்த்தையில் எட்டப்படாததற்கு இந்திய வெளியுறவு அமைச்சரே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன் பேச்சுவார்த்தையின்போது சுயமாக முடிவெடுக்கவில்லை என்றும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தார் என்றும் கிருஷ்ணாவை பற்றி குறிப்பிட்டார் குரேஷி. இது இந்திய தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணாவை அவமதித்துவிட்டதாக இங்குள்ள அரசியல் தலைவர்கள் கூறினர்.
இந்நிலையில் இருதரப்பிலும் தேவையற்ற வார்த்தைகள் பேசி உறவு சீர்கெடுவதை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி விரும்பவில்லை. இந்தியாவுடன் பேச்சு நடத்துவதை பாகிஸ்தான் விரும்புவதாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் பெருந்தன்மையானவர் அவரது தலைமையில் தீர்வு காணவே பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்காக இந்தியாவுடன் பேச்சு நடத்துவதை தமது நாடு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம் என மன்மோகன் சிங் தம்மிடம் உறுதி அளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் உறவை மேம்படுத்தவே பாகிஸ்தான் விரும்புகிறது. பேச்சு நடத்துவதன் மூலம் புதிய அத்தியாயத்தைப் படைக்க விரும்புவதாக வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் சுமுகமான உறவை மேற்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
ஸ்திரமான பேச்சுவார்த்தைக்கு அப்போது இருவரும் ஒப்புக் கொண்டதாக குரேஷி மேலும் தெரிவித்தார்.
நீண்ட காலமாகவே இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்த்துக் கொள்ள முடியும். பரஸ்பரம் நம்பிக்கை வைத்து பேச்சு நடத்துவதன் மூலம் உறவு சுமுகமாகும். இரு நாடுகளிடையிலான உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்.
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு எட்டாத தூரத்தில் இருப்பதாகவேத் தெரிகிறது.
இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் குரேஷி குறிப்பிட்டார்.
Related International News:
Pak PM Gilani wants to continue dialogue with IndiaPak
slams India, peace process collapses - International Tamil NewsKrishna
arrives in Pak, will meet Zardari, Gilani on Thursday - Current News in
India