டெல்லி: உலகக் கோப்பை ஹாக்கியில் ஸ்பெயின் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. ஸ்பெயின் 5 கோல்களைப் போட்டது. இறுதி வரைப் போராடியும் இந்திய அணியால் 2 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்த தோல்வியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துவிட்டது.
இதுவரை இந்தியா விளையாடிய 3 போட்டிகளில் பாகிஸ்தானை மட்டும் வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் மிகமுக்கியமான 3-வது போட்டியில் ஸ்பெயினை இந்தியா எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 19-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் சலா கோலடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து 35-வது நிமிடத்தில் ஸ்பெயின் மேலும் ஒரு கோலடித்தது.
கடுமையாகக் போராடிய போதிலும் முதல் பாதியில் இந்திய வீரர்களால் ஒருகோல் கூட போட முடியவில்லை.
இரண்டாவது பாதியின் 39-வது நிமிடத்தில் இந்திய வீரர் சந்தீப் சிங் முதல் கோல் அடித்தார்.
எனினும் அதிரடியாக விளையாடி ஸ்பெயின் வீரர்கள் 41, 42-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து இந்திய வீரர்களைத் திணறச் செய்தனர். 43 -வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்வீந்தர் சிங் 2-வது கோலை அடித்தார்.
இதுவே இந்திய அணி பெனால்டி கார்னர் மூலம் இந்த ஆட்டத்தில் அடித்த கடைசி கோலாகவும் அமைந்தது.
ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் ஸ்பெயின் மேலும் ஒரு கோலடித்தது. இதன் மூலம் அந்த அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்றது.
Related Sports News:
ஹாக்கி
2010: இன்று ஆஸ்திரேலியாவுடன்
மோதும் இந்தியா!
உலகக்
கோப்பை ஹாக்கி போட்டி...
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஆக்கி
வீரர்களுக்கு ரூ.1 கோடி!