Home Tamil News Sports News இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
  

Latest News:

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

July 17, 2010 16:25:17
மூன்று டெஸ்ட் தொடர்கள் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கை சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் போட்டி நாளை காலேயில் தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் முன் பயிற்சி ஆட்டமாக இலங்கை வாரியத் தலைவர் அணியுடன் இந்தியா ஆடிய 3 நாள் ஆட்டம் டிராவில் முடிந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் காயம் காரணமாக கடைசி நேரத்தில் அணியில் இடம் பெறாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு பலனிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இந்திய மட்டையாளர்கள் உள்ளனர். ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர், லட்சுமணன், யுவராஜ்சிங், கேப்டன் தோனி ஆகியோர் அதிக ரன் எடுக்க உதவுவார்கள் என்றாலும், இலங்கை அணியும் சாதாரண அணியாகத் தெரியவில்லை. சாதனை செய்யும் அளவுக்கு ரன்களை குவித்தால் தான் இந்திய அணி சாதிக்க முடியும்.

மேலும் இலங்கை மண்ணில், இந்திய அணி தொடரை வென்று 17 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி செயல்படும் என்பதால் இந்திய அணிக்கு இந்தத் தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

முதல் டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம்.

-சிவாஜி டிவி

Related Sports News:

Indian Cricket Team moved to Lanka from Chennai - Cricket News
Sreesanth injured: India to face more trouble - Cricket News
India - Pak. cricket series soon, says Sharad Pawar - Sports News