Home Tamil News Entertainment News முதன்முறையாக வெளிநாட்டில் நடைபெறும் ரஜினி பட இசை வெளியீட்டு விழா
  

Latest News:

முதன்முறையாக வெளிநாட்டில் நடைபெறும் ரஜினி பட இசை வெளியீட்டு விழா

July 30, 2010 17:22:27

முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடைபெவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கும் படம் எந்திரன். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. எந்திரன் பட வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் ரஜினிகாந்த் மலேசியாவுக்குக் கிளம்பிப் போயுள்ளார். 
விழாவுக்காக இதற்காக வரலாறு காணாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
ரஜினி படம் ஒன்றின் ஆடியோ விழா பிரமாண்டமான அளவில் வெளிநாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தோடு பங்கேற்கிறார். இதற்காக அவர் குடும்பத்தோடு மலேசியா கிளம்பிச் சென்றுள்ளார். அதேபோல இயக்குநர் ஷங்கர், படப்பிடிப்புக்குழுவினரும் மலேசியா புறப்பட்டுப் போயுள்ளனர்.
அதேபோல படத் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், அவரது தம்பியும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் இன்றுமலேசியா கிளம்பிச சென்றனர்.

Related Entertainment News:

Enthiran Lyrics: Vairamuthu Open Talk - Latest Film News
Endhiran Latest Stills - Tamil Movie Gallery
Shankar launches his new website Endhiran Latest Stills - Latest Tamil Nadu News
Comments
  • Posted by  N.Vimalraj
    2010-07-30 07:55
    ஹை சிர் இஅம் விமல்ரஜ் டமில்னடு. க்ரிஷ்னகிரி டிச்டெச்ட். சிர் இஅம் ரஜனி சிர் பனெ. சிர் இஅம் சொமிங் எந்த்ரன் ஃபில்ம் ச்டில்ல் அல்சொ வெர்ய் நிசெ. சொ அச்டிங் அன்ட் ச்டில்ல் யொஉத் ஒன்ல்ய் ரஜனி சிர் அல்சொ வெர்ய் கோட். சொ ப்ரொஉடெ ஒஃப் யொஉ. ரஜ்னி சிர் அல்சொ வெர்ய் கோட். மன்.சொ தன்கிங் யொஉ. அட் விமல் செல்ல் +919092350227,8098417102. சொ தன்கிங்யொஉ.