Home Tamil News National News டெல்லி முதல்வர்கள் மாநாடு ரத்து!
  

Latest News:

டெல்லி முதல்வர்கள் மாநாடு ரத்து!

July 23, 2010 14:10:18
விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுவதாக இருந்த 10 மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் விலைவாசியைக் கட்டுப்படுத்த 10 மாநில முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் குஜராத், பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்கள் இடம் பெற்றன.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. மழை வெள்ளத்தில் குஜராத் மாநிலம் கடுமையாகப் பாதித்துள்ளதால் முதல்வர்கள் குழுவின் தலைவர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இயலவில்லை. அதனால் இந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நடைபெறும் பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

-சிவாஜி டிவி

Related National News:

MK Stalin goes to Delhi for CMs meet - Tamil nadu News
Delhi CM Sheila Dikshit tasted the bitter pill of capital traffic - Tamil News