Home Tamil News National News அனைத்து அமைச்சர்களும் அவைக்கு வரவேண்டும்!: எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசு கட்டளை
  

Latest News:

அனைத்து அமைச்சர்களும் அவைக்கு வரவேண்டும்!: எதிர்க்கட்சிகளை சமாளிக்க மத்திய அரசு கட்டளை

July 28, 2010 10:55:33
விலைவாசி உயர்வு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஆளுங்கட்சியை அசைக்கப் பார்ப்பதைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வரவேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு அல்லது எந்தப் பிரச்னையை கையில் எடுத்தாலும் எதிர்க்கட்சியினருக்கு ஆளும் தரப்பில் இருந்து தக்க பதிலடி தரவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கொண்டு வரமுயலும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு செவிசாய்க்கவும் அரசு தயாராக இல்லை. விலைவாசி உயர்வைவிட மிக முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. அவையெல்லாம பேசித் தீர்க்கப்படக் கூடியவைதான். அதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பிற்கோ ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கோ ஒத்துழைக்க முடியாது என்பதில் அரசு தீர்மானமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கொண்டுவரப் பார்க்கும் விலைவாசி உயர்வு தொடர்பான ஒத்தி வைப்பு தீர்மானம் தேவையற்றது. விலைவாசி உயர்வு குறித்து ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின்போதே பேசப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சி கூறிவந்தாலும், விலைவாசி பிரச்னையை பேசாமல் வேறு எந்த நடவடிக்கையும் நடக்கவிட மாட்டோம் என்பதில் எதிர்க்கட்சிகளும் தீர்மானமாக உள்ளதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் இன்றும் அனல் பறக்கப் போவது நிச்சயம்.

Related National News:

Price rise issue rocks Parliament - Current News in India
Price storm in Parliament - National News
Parliament to hit Violent in Monsoon Session - National Tamil News