நாடாளுமன்றக்கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த மதிய உணவு விருந்தை பாஜக புறக்கணித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை பாஜக வெளியிட்டது.
இக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர்கள், குஜராத் அமைச்சர் அமீத் ஷாவுக்கு
எதிராக தவறாக காங்கிரஸ் அரசு சிபிஐயை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினர்.
சிபிஐயை தங்கள் கைப்பாவையாக நடத்தி வரும் காங்கிரஸ் அரசு, அரசியல்
நோக்கத்துடன் பழி வாங்கும் போக்கில் நடந்துகொள்கிறது. இதுபோன்ற
கீழ்த்தரமான செயல் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, ரவிசங்கர்
பிரசாத் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பாஜக வின் புறக்கணிப்பைத் தொடர்ந்து பிரதமரின் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
-சிவாஜி டிவி
Related National News:
Amit Shah asked more time from CBI - Online Tamil NewsCBI
summoned Gujarat minister Amit Shah in Sohrabuddin case - India Latest
NewsNitish
Kumar send back Flood Fund to Gujarat