Home Tamil News Sports News டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்கள்: பாண்டிங் சாதனை
  

Latest News:

டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்கள்: பாண்டிங் சாதனை

July 24, 2010 11:30:59

ஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 12 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பாண்டிங்குக்கு கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும்  பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிக்கி பாண்டிங் 40 ரன்களை கடந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ரன்கள் எடுத்தவர் சாதனையை படைத்தார். 
12 ஆயிரம் ரன்களை கடந்துள்ள பாண்டிங் டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 39 சதங்களை எடுத்துள்ளார். இதிலும் சச்சினே முதலிடத்தில் இருக்கிறார். அவர் 47 சதங்களை அடித்துள்ளார்.

Related Sports News:

Sachin's Records Are Unbeatable: Ponting
Ponting Lauds Changes In Championship Trophy