தனி தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஏற்கெனவே 300 மாணவர்கள் போராட்டங்கள் மற்றும் தற்கொலைகள் மூலம் இந்தப் போராட்டத்துக்காக உயிரைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பது பதட்டதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தற்கொலையுண்ட மாணவர் பெயர் சாய்குமார். பி டெக் இரண்டாமாண்டு படித்து வந்தார். காலையில் வகுப்பில் கலந்துகொண்டுவிட்டு விடுதிக்குத் திரும்பிய அவர், விடுதி அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இதர மாணவர்கள் விடுதிக்குத் திரும்பியபோது சாய்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து ஆம்புலன்சை வரவழைத்தனர். எனினும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே சாய்குமார் உயிரிழந்தார்.
தெலங்கானாவுக்காக தனது உயிரை அர்ப்பணிப்பதாக சாய்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
Related National News:
ஆந்திர நடிகர்களின் படங்களைப் பார்க்க
கூடாது: தெலுங்கானா தலைவர் தடைதெலுங்கானாவுக்காக
ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் -
சந்திரசேகரராவ்தெலுங்கானா
விவகாரம்: பிரதமர் முடிவு இன்று அறிவிப்பு