மீண்டும் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் ரஜினி மகள் சௌந்தர்யா.
கோவா படத்துக்காக சிலரிடம் கடன் பெற்று, படம் வெளியாகும் நேரத்தில் பணத்தை திருப்பிக் கேட்டு அவர்கள் கோர்ட்டில் கேஸ் போட்டது நினைவிருக்கலாம். ஒருவழியாக அந்த சிக்கல்களை முடித்து கோவா படத்தையும் வெளியிட்டு முடித்தார்.
இப்போது ரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான சுல்தானுக்கும் அதே பைனான்ஸ் பிரச்சனை வந்திருக்கிது. வழக்குப் போட்டிருப்பவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தினர்!
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.
2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.
இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
அவ்வழக்கு மனுவில், 'பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது. உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது ரிலையன்ஸ்.
வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Related Entertainment News:
ரஜினி மகள் படத்துக்கு
இடைக்காலத் தடை
பணம் தந்துவிடுகிறேன்! - கோர்ட்டில்
சௌந்தர்யா உறுதிரஜினி
மகள் மீது வழக்கு தொடுத்தவர் கார் உடைப்பு!