இந்தியில் தனக்கு வந்த 5 பட வாய்ப்புகளை நடிகை பத்மப்பிரியா நிராகரித்துவிடடார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மன நிறைவுக்காக நிறைய படங்களில் நடித்து விட்டேன். அதற்காக பல விருதுகளும் வாங்கி விட்டேன். ஆனால் கமர்ஷியல் ஹீரோயின்களுக்குள்ள முக்கியத்துவமும் அங்கீகாரமும் தனியாக உள்ளது. அதனால் இனி சில வருடங்களுக்கு கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தியில் கதையம்சமுள்ள படத்தில் நடித்தேன். இதனால் அங்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்கு பிறகு வந்த படங்களும் அதேபோன்று வந்தது. ஐந்து படங்கள் வரை நிராகரித்துவிட்டேன். கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக அங்கீகாரம் கிடைத்த பிறகு எந்த படத்தில் நடித்தாலும் அதற்கான வியாபார வளையம் பெரிதாக இருக்கும். அதன் பிறகு வித்தியாசமான முயற்சிகள் எடுத்தால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கிறார் பத்மப்பிரியா. தமிழுக்கு எப்போது மீண்டும் வரப் போகிறீர்கள் பத்மப்பிரியா?
Related Entertainment News:
Padmapriya Launches Shriram One Stop the truck bazaarActress Padmapriya wardrobe policy!Padmapriya
In Bollywood