Home Tamil News Entertainment News சி்ம்புவுடன் இணைகிறார் பரத்
  

Latest News:

சி்ம்புவுடன் இணைகிறார் பரத்

July 24, 2010 11:56:35

முதல்முறையாக சிம்புவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் பரத். வானம் என்ற படத்தில் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பரத். தெலுங்கில் அல்லு அர்ஜுன், மனோஜ், அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் வேதம். இந்தப் படம் வானம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோ வேடத்தில் தெலுங்கில் நடித்த மனோஜ் நடிப்பார் என்று கூறப்பட்டது. அவர் விபத்தில் சிக்கியதால் மூன்று மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த கேரக்டரில் நடிக்க பரத்தை அணுகின்றனர். அவரும் ஓகே சொல்லிவிட்டார். 
இதையடுத்து அந்த கேரக்டரில் பரத் நடிக்கிறார். தெலுங்கில் வேதம் படத்தை இயக்கிய கிருஷ் இயக்குகிறார். நான்கு வெவ்வேறு கதைகள், கிளைமாக்ஸில் ஒன்று சேரும் விதமாக இந்த படம் இருக்கும் என்று கிருஷ் தெரிவித்தார்.

Related Entertainment News:

Actor bharath new film - Latest Movie News Online
Bharath Busy With His Balancing Act
Tamil Cinema Events - Thambikku Intha Ooru Press meet video